ஆ : ஆத்மார்த்தமான நட்பின் துவக்கமாய்
ஆன்மாவைத் தொட்ட உறவே!
தி : திடமான மனங்கொண்ட நட்பே
திண்ணமாய் வளையவரும் சகியே!
ல : லட்சியப் பாதையே உனது இலக்காம்
லட்சியக் கொள்கையே உனது இலக்கணமாம்!
ட் : பாட்டாளியின் பெண்ணாய் உயிர்ப்பெற்றாய்
பட்டறிவுப் பெட்டகமாய் உருப்பெற்றாய்!
சு : சுடராய் அன்பினில் மிளிர்ந்தாய்
சுற்றமாய் என்னையும் நேசித்தாய்!
மி : மிகையில்லா அன்பதனைப் புகட்டினாய்
மின்னொளியாய் நட்பிலும் ஒளிர்ந்தாய்!
No comments:
Post a Comment