பொழுதே புலர்ந்துவிடாதே! நான் தூங்கவேண்டும்...
இதய வீணையின் நரம்புகள் அறுபட்டுச்
சுருதிகள் ஓய்ந்தபோது,
இடைவிடாமல் ஒலித்த
மௌன அழுகைகளின் ஊமை ராகங்களைக்
கேட்டுக் கேட்டு
என் செவிப்பறைகள் களைத்திருகின்றன.
பொழுதே புலர்ந்து விடாதே,
நான் தூஙக வேண்டும்! [.....]
ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
வசந்த காவியம் படைக்கும் வாள்விழிகளின்
இமையோரச் சுகந்தங்களிலே…
மோனக் கனவுகளை மூட்டிவிடுகின்ற
செம்பிஞ்சு இதழோரச் சிந்துகளின்
மௌன ராகத்திலே…
ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
இன்ப மயமான எத்தனை நாட்கள்! [.....]
கரைசேராமல் கண்விழிக்கப்பட்ட கனவுகள்
மலையடிவாரத்து மாந்தோப்பு நிழலில்
வசந்தத்தின் கனவுகளை அனுபவிக்க வந்த
ஓர் ஒற்றைக் குயில்-
நிறைவேறாமல் முற்றுப்பெற்றுவிட்ட நினைவுகளோடும்
கரைசேராமல் கண்விழிக்கப்பட்ட கனவுகளோடும்
வசந்தகால வருகைக்கு முன்பாகவே
நிரந்தரமாக அந்த மாந்தோப்பைப் பிரியப்போகிறது. [.....]
அந்த மயானங்களில்… ஒரு தாலாட்டுக்காக…
என்னிடம் விவாதிக்க மறுத்து
என் இதயம் ஊமையாகிவிடும்போது-
நான் அதிகமாய்ப் புலம்புகிறேன்.
என்னுள் விவாதங்கள் நடந்து,
முடிவுகள் எடுக்கப்படும்போது-
நான் ஊமையாகிவிடுகிறேன். [.....]
இங்கே சில முடிவுகள் மறுபரிசீலனைக்கு...
வரம்புகள் மீறப்பட்டுள்ளன;
விதிவிலக்குகளே விதிகளாக்கப்பட்டுள்ளன;
பாலைகளிலும், பாறைகளிலும்
நாற்றுகள் நடப்பட்டு, நீர் பாய்ச்சப்பட்டதால்
நாற்றுக்கும் நட்டம்; நீருக்கும் நட்டம்.
எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றத்தில் முடிந்துவிட்டதால்
கனவுகளும் கற்பனைகளும் தண்டிக்கப்பட வேண்டும்” [.....]
No comments:
Post a Comment