- ஆசை வெட்கம் அறியாது .
- உள்ளங்கை நெல்லிக்கனி போல.
- அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது.
- ஓட்டை சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
- யானைக்கும் அடி சறுக்கும்.
- அகத்தின் அழகு முகத்திலே தெரியும்.
- அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவார்களா?.
- அமாவாசை சோறு என்றைக்கும் அகப்படுமா?.
- அரசன் அன்றே கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.
- அலை மோதும்போதே தலை முழுகு.
- காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
- அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் (விஷம்) நஞ்சாகும்.
- கிடைக்கபோகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
- ஆபத்துக்கு பாவம் இல்லை.
- ஆழமறியாமல் காலை விடாதே.
- ஆனைக்கும் பானைக்கும் சரி.
- ஆணை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.
- இக்கரைக்கு அக்கறை பச்சை.
- இனம் இனத்தை சேரும்.
- எரிகிற கொள்ளியில் என்னை ஊற்றினால்போல.
- எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் இலாபம்.
- எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே.
- பிள்ளை பெரும் முன் பெயர் வைக்காதே.
- எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.
- ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.
- கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது.
- கடைத்தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே.
- கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
- கழுதை அறியுமா கற்பூர வாசனை?.
- கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
- சர்க்கரை என்றால் தித்திக்குமா.
- தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பார்க்காதே.
- தான் ஆடாவிட்டாலும் தன தசை ஆடும்.
- தானொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
- பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.
- பதறிய காரியம் சிதறி போகும்.
- பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
- பழகப்பழகப் பாலும் புலிக்கும்; கிட்ட இருந்தால் முட்டப்பகை.
- பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி.
- புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
- பொறுத்தார் பூமி ஆள்வார்.
- மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை.
- மாறி அல்லாது காரியம் இல்லை.
- மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
- முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா.
- வெளுத்ததெல்லாம் பாலமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
- வெள்ளம் வரும்முன்னே அணைகோல வேண்டும்.
- வெறுங்கை முழம் போடுமா?
- வேண்டாப் பொண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம்.
- வேலியே பயிரை மேய்ந்தால், விளைவதெப்படி?.
- ஏரி வெட்டியும் கெட்டது வெட்டாமலும் கெட்டது.
- பணம் பெருத்தா ....பறச்சேரியில் போடு....
- வெள்ளிக்குப் போடுறதும், வேசிக்குப் போடுறதும் ஒண்ணு ....
- கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
- அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
- குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
- தூர்ந்த கிணற்றைத் தூர்வார்காதே
- தலையை தடவி மூளையை உரிவான்
- இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ?
- கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா ?
- ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள்
- இரண்டு பொண்சாதிக்காரனுக்குக் கொண்டை என்னத்திற்கு ?
- சதை உள்ள இடத்தில கத்தி நாடும்
- பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது
- எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்
- காடுப்பூனைகுச் சிவராத்ரி விரதமா ?
- உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?
- சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
- கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
- இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
- கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
- பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
- வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல .
- கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .
- சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
- குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .
- பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்.
- தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்.
- சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் இச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் .
- பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !.
- கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
- ஆற்றிலே போகுது தண்ணீரை , அப்பா குடி , ஆத்தாள் குடி.
- மதில் மேல் பூனை போல .
- பிள்ளை பெறப் பெறப் ஆசை , பணம் சேரச் சேர ஆசை .
- தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும் .
- அடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா ?
- ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்.
- கண்டால் காமாச்சி நாயகர் , காணவிட்டால் காமாட்டி நாயகர்.
- ஒட்டைக்கூதன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள்..
- தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
- பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
- உலகத்துக்கு ஞானம் பேய் , ஞானத்திற்கு உலகம் பேய் .
- வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு என்ன ?
- பொங்கின பால் பொய்ப்பால்.
- அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன் .
- இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா ?
- ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ?
- பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்.
Friday, April 8, 2011
பழமொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment